புகுந்த வீட்டின் புதிய சூழலால் மணமகள் உணவின் அளவை குறைத்து உண்பதை நெல்லையில் "மாலை மசக்கை" என்பர். திருமணம் ஆன மாதத்திலேயே கர்ப்பம் தரிப்பதை "மணவறை சூல்" என்பர். மாலையை "ஆரம்" என கூறுவர். கைலியை "சாரம்" என குறிப்பிடுவர். முந்திரி பருப்பை "அன்டிப்பருப்பு" என்பர். பாசிப்பருப்பை "சிறுபருப்பு" என கூறுவர். காராசேவை "கடலை பணியாரம்" என்பர். மொழிக்கு சிறப்பு சேர்பதாக வட்டார சொற்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் வழங்கி வரும் வட்டார சொற்கள் குறித்த கருத்துக்களை சுவையாக விவாதிக்க yahoo groups-இல் 'dialectics' என்ற வெப்சைட் குழு உள்ளது.
நன்றி: தினமலர்.
No comments:
Post a Comment